Posts

Showing posts from March, 2018

தாமரை மொட்டுப் போல

Image
பத்து அல்லது பதினொன்று வயதுக்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம் . சைவம் சார்ந்த ஒரு குடும்பத்தில்  ஆணிவேராக இருக்கும் நம்பிக்கையின் பொருட்டு கடவுள் நம்பிக்கை ,  வழிபாடுகள் , கடவுள் மறுப்பும் கூட இயல்பானதே . அடர் சிவப்பில் செம்பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப் பூக்களும் , ( தங்கரளிப் பூக்களின் பின்புறம் வாய்வைத்து தேன்உறுஞ்சும் குழைந்தைகள்  இன்றும் இருக்கிறார்கள் ) எளிமையான சங்கு புக்ஷ்பங்களும் , மௌனமிக்க  நந்தியாவட்டை பூக்களுமே எனது முதல் பூக்கள் . மாலை நேரத்தில் விளக்குச் சரம் கொண்டு வரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி . ( என்  அம்மாவின் சிநேகிதி வட்டத்தில் இவளுக்கு தனியிடம் )                 O          O          O மார்கழி மாதத்தில் வாசலில் சாண உருண்டையில் செருகி நிற்கும் பூக்கள்...

நெடு நடனம்

Image
நடராஜம் , சிவதாண்டவம் , நடராஜ வழிபாடு , பஞ்ச சபைகள் , நடன சபைகள் இவைகளில் எனக்கு பேரார்வம் ஏற்பட இரண்டு காரணிகள் ஒன்று  — குனித்த புருவமும் கொவ்வை செவ் வாயிற் குமிண் சிரிப்பும் பனித்தசடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே-- என்ற நாவுக்கரசரின் பாடல் சிறுவயது முதல் தந்த பரவசம். இரண்டு  — முப்பதைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்து படிக்க நேர்ந்த ‘ FRITJOF CAPRA“  என்ற இயற்பியல் பேரறிஞரின் உலகப் புகழ் பெற்ற நூல் , “ Taoism of physics “. இந்த இரண்டு காரணிகளால் நான் நடராஜ தாண்டவம் குறித்து உணர்ந்து கொள்ள பெரிதும் முனைப்பு எடுத்துக் கொண்டேன் .                     0          0           0                 ...