கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் :

கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் : 0.01 ) ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை தேடல் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம் . அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம் . அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம் . ஆனால் ஒரு போதும் அவன் அறுதியான முடிவுகளுக்கு - அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல வரமுடியாதவனாக இருக்க வேண்டும் . ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா ? ஒரு விதையை நீங்கள் கண்டெடுக்கிறீர்கள் நீங்கள் இதுவரை தேடிக் கொண்டிருந்தது அதுவே என உறுதி கொள்கிறீர்கள் நல்ல நிலம் பார்த்து விதைத்து நீரூற்றி வளர்க்கிறீர்கள் செடி மரமாகி கிளபரப்பி பூத்து குலுங்கி காய்த்து மறுபடியும் விதைகளையே தருகிறது வாழ்விலும் படைப்பிலும் இதுவே நிகழ்கிறது ஒரு தேடுதல் பல தேடுதலைகளை கண்டெடுத்து அது ஒரு போதும் முற்று பெறுவதில்லை பிரக்ஞாபூர்வமான வாழ்விலும் படைப்பிலும் இதுவே நிகழ்கிறது 0.02 ) வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்...